டி-சர்ட் சகிதம் திண்ணைக்கு வந்து வாக்கு சேகரிப்பு! சூலூர் மக்களை சுறுசுறுப்பாக்கிய ஸ்டாலின் பிரசாரம்!!

தமது வழக்கமான பாணியில், டி சர்ட் அணிந்து வாக்கிங், திண்ணை பிரசாரம் என்று, இன்று காலையிலேயே சூலூர் தொகுதியை வலம் வந்து, திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

 

கோவை மாவட்ட்ம சூலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நெருங்கிவிட்டது. இதனால் முக்கிய அரசியல் கட்சித்தலைவர்கள் முற்றுகையிட்டு, சூலூரில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

எப்படியும் சூலூர் தொகுதியை வென்றாக வேண்டும் என்ற முனைப்புடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சூலூர் தொகுதியை பம்பரமாக சுழன்று வருகிறார். கடந்த வாரம் வந்து சென்ற நிலையில் மீண்டும், திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரவாக இன்று காலை ஸ்டாலின் சூலூரில் வாக்கு சேகரித்தார்.

 

 

தமது வழக்கமான பாணியில் டிராக் சூட், டீ சர்ட் சகிதமாகஅப்பநாயக்கன்பட்டியில் வாக்கிங் சென்று வாக்குகளை சேகரித்தார். அவரை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். இளைஞர் போல் வலம் வந்த அவர், அப்பகுதியில் இருந்த மக்களிடம் கைகுலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 

 

பின்னர் நடைபெற்ற திண்ணை பிரச்சாரத்தில் பொதுமக்களை சந்தித்த ஸ்டாலின், அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அப்பகுதி மக்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.


Leave a Reply