10 ஆம் வகுப்பில் மதிப்பெண் குறைந்ததால் சேர்க்க மறுப்பு என அரசு உதவி பள்ளி மீது புகார்!

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், பிளஸ் 1 வகுப்பில் அதே பள்ளியில் சேர்க்க மறுத்த விவகாரம், கருமத்தம்பட்டி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில், அரசு உதவி பெறும் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 10ஆவது படித்த, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகள், பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றார்.

 

இதை காரணம் காட்டி, அந்த மாணவிக்கு அதே பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் சேர்க்க, பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. இது குறித்து மாணவியின் பெற்றோர் கருமத்தம்பட்டி நுகர்வோர் விழிப்புணர்வு அமைப்பில் புகார் அளித்தனர்.

 

அதைத்தொடர்ந்து நுகர்வோர் விழிப்புணர்வு அமைப்பினர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply