கோமதி, ‘குற்றம் குற்றமே’ இதழ் ஆசிரியர் உள்பட சாதனையாளர்களுக்கு ஆளுநர் பாராட்டு!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தங்கமங்கைகள் கோமதி மாரிமுத்து, தபிதா ஆகியோருக்கு விருதுகள் வழங்கினார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தங்கமங்கைகள் கோமதி மாரிமுத்து, தபிதா ஆகியோருக்கு விருதுகள் வழங்கினார்.

ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து, இரண்டு தங்கப் பதக்கம் வென்ற சென்னை மாணவி தபிதா, குற்றம் குற்றமே இதழ் ஆசிரியர் எம். கண்ணதாசன் உள்ளிட்டவர்கள், சென்னையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.

குற்றம் குற்றமே இதழ் ஆசிரியர் எம். கண்ணதாசனுக்கு ஒடிசா மாநில முன்னாள் ஆளுநர் எம்.எம். ராஜேந்திரன் விருது வழங்கினார்.
குற்றம் குற்றமே இதழ் ஆசிரியர் எம். கண்ணதாசனுக்கு ஒடிசா மாநில முன்னாள் ஆளுநர் எம்.எம். ராஜேந்திரன் விருது வழங்கினார்.

இந்திய மாலுமிகள் நல சங்கம் சார்பில், 19ஆவது ஆண்டு விழா மற்றும் சாதனையாளர்களை சிறப்பிக்கும் வகையில், ஐஸ்வாட் -19 பாராட்டுவிழா சென்னை லீமெரிடியன் நட்சத்திர ஓட்டலில் விமரிசையாக நடந்தது. விழாவிற்கு, இந்திய மாலுமிகள் நலச்சங்க தலைவர் டாக்டர் ஏ. பாபு மைலன் வரவேற்றார்.

ஒடிசா மாநில முன்னாள் ஆளுநர் எம்.எம். ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்., அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், சென்னை துறைமுகத்தின் துணைத்தலைவர் சிரில் சி. ஜார்ஜ், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்தினர்.

 

தமிழக கவா்னர் கையில் விருது வாங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது- தங்கமங்கைகள் கோமதி மாரிமுத்து, தபிதா
தமிழக கவா்னர் கையில் விருது வாங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது தங்கமங்கைகள் கோமதி மாரிமுத்து, தபிதா

இவ்விழாவில், 23வது சர்வதேச ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த, தமிழக வீராங்கனை திருச்சி சோ்ந்த கோமதி மாரிமுத்து, ஆசிய தடகளப் போட்டியில் 100 மீட்டர் நீளம் தாண்டுதல், தடை தாண்டுதல் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கம் வென்ற சென்னை மாணவி தபிதா, மாலுமிகளின் சேவையாளர் பி. அந்தோணி ஆகியோருக்கு, ISWOT- நிகழ்காலம் குளோபல் விருது – 19 வழங்கப்பட்டது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று, விருதுகளை வழங்கினார்.

விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகா்கள்
விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகா்கள்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையில் ஏழ்மையான விவசாய குடும்பத்தில் பிறந்த கோமதி, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்பால் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளார். ஒருவர் தன் மீது நம்பிக்கை வைத்தால், தடைகளை உடைத்து வெற்றி பெற முடியும் என்பதற்கு, கோமதி உதாரணமாக திகழ்கிறார். விளையாட்டு மைதானத்தில் ஜாதி, மதம், இனம் கடந்து ஒற்றுமையாக வீரர், வீராங்கனைகளை நாட்டு மக்கள் உயர்த்தி பிடிப்பதாக, ஆளுநர் குறிப்பிட்டார்.

நன்றி உரையாற்றும் நிகழ் காலம் இதழ் ஆசிரியரும், வில்லவன் பதிப்பகம் இயக்குனருமான வி. முருகன்
நன்றி உரையாற்றும் நிகழ் காலம் இதழ் ஆசிரியரும், வில்லவன் பதிப்பகம் இயக்குனருமான வி. முருகன்

அதேபோல் ஊடகத்துறையில் சிறந்த பங்களிப்பு செய்து வரும் ‘குற்றம் குற்றமே’ வார இதழ் மற்றும் இணையதளத்தின் நிறுவன ஆசிரியர் எம். கண்ணதாசன், ‘நிகழ்காலம்’ இதழ் ஆசிரியரும், வில்லவன் பதிப்பகம் இயக்குனருமான வி. முருகன்,யுனிவர்சல் குழும தலைவர் டாக்டர் விஜய் ஆனந்த், தொலைக்காட்சி நெறியாளர் மோகன்ராஜ் ஆகியோருக்கு, சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

 

விழாவில், அந்தோணி பிள்ளை அறக்கட்டளை ஓவியம் நிரஞ்சன், மக்கள் உரிமை கழகம் டாக்டர் பி. கல்பனா, கிறிஸ்தவ பாதுகாப்பு இயக்கத்தின் மகிமைதாஸ், காமராஜன் கல்வி அறக்கட்டளை உறுப்பினர் பி. வேல்ராஜ், சென்னை உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் டாக்டர் டி. சூரிய நாராயணன், புன்னகை இதழ் ஆசிரியர் மு.தீபலட்சுமி, குற்றம் குற்றமே இதழ் முதன்மை ஆசிரியர் கே. திலகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை இந்திய மாலுமிகள் நலச்சங்க விழா குழுவைச் சேர்ந்த பாபு மயிலான், நிகழ்காலம் இதழ் ஆசிரியர் முருகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


Leave a Reply