மக்கள் நீதி மய்யத்தை பார்த்து பிற கட்சிகளுக்கு பீதி! சூலூர் தேர்தல் பிரசாரத்தில் கமலஹாசன் பேச்சு!!

மக்கள் நீதி மய்யத்திய பார்த்து, அரசியல் கட்சியினருக்கு பெரும் பீதி ஏற்பட்டுள்ளது என்று, அதன் தலைவர் கமலஹாசன் பேசினார்.

 

கோவை, சூலூர் சட்டசபை தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மயில்சாமியை ஆதரித்து, நடிகர் கமலஹாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

 

மாற்றத்தை விரும்பும் இளைஞர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. வாய்ச் சொல் வீரராக இல்லாமல் செயல் வீரராக இருக்க வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய நல்ல மனம் வேண்டும்; அதற்கு நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.

 

கமலஹாசனை வரவேற்க, அவரது உருவம் கொண்ட முகமூடி அணிந்து காத்திருந்த சிறுவர்கள்

 

இங்குள்ள நீர்நிலைகளில் சாக்கடை ஓடுகிறது. குடிநீரிலும்ளை சாக்கடை நீர் கலக்கிறது இதையெல்லாம் பாதுகாக்க தகுதியுள்ளவர், எங்களது வேட்பாளர். அரசியல் கட்சியினருக்கு எங்களை பார்த்து பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. எங்களது வளரச்சியை கண்டு இப்படியே சென்றால் நாளை நமதே.

 

மக்கள் நீதிமய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பேசிய கவிஞர் சினேகன்

 

முன்னதாக, பாடலாசிரியர் சினேகன் பேசுகையில், பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில், அரசை பொதுமக்கள் சாடுகின்றனர். காவல் துறையினர் சுதந்திரமாக செயல்பட முடியாமல் கைகட்டி நிற்க வேண்டிய நிலை உள்ளது. 100 சதவிகித வாக்குகளை வலியுறுத்த விழிப்புணர்வை ஏற்படுத்த நம்மவர் தேவை என்றார்.


Leave a Reply