குற்றம் குற்றமே’ செய்தி எதிரொலி!! தடைகாலத்தில் மீன்பிடித்தவர்கள் மீது நடவடிக்கை!

தேவிப்பட்டிணத்தில், தடை காலத்தில் திருட்டுத்தனமாக மீன் பிடிப்பது தொடர்பாக ‘குற்றம் குற்றமே’ இதழ் வெளியிட்ட செய்தியை தொடர்ந்து, மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

கடலில் உள்ள மீன்களின் இனப்பெருக்கத்துக்காக, ஆழ்கடலில் மீன்பிடிக்க தற்போது அரசு தடை விதித்துள்ளது. ஆனால், இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக படகுகளை இயக்கி, சிலர் சட்ட விரோதமாக மீன் பிடித்து வந்தனர். அங்குள்ள சந்தைகளை துணிச்சலாக மீன்களை விற்று வந்தனர்.

 

இது குறித்த செய்தி, குற்றம் குற்றமே இணையதளத்தில், மே 6ஆம் தேதி வெளியானது. இதை தொடர்ந்து, தேவிபட்டினம் கடல் பகுதியில் மீன்வளத்துறையினரும், கடலோர காவல்துறையினர் இணைந்து, கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

 

அவர்கள் நடத்திய சோதனையில், 10 படகுகளை பறிமுதல் செய்து, இழுவலை உள்பட அனைத்தும் கைப்பற்றப்பட்டன. இது குறித்து, தேவிப்பட்டினம் கடலோரகாவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.


2 thoughts on “குற்றம் குற்றமே’ செய்தி எதிரொலி!! தடைகாலத்தில் மீன்பிடித்தவர்கள் மீது நடவடிக்கை!

  1. Pingback: Masum

Leave a Reply