திருப்பூர், மற்றும் கோவை மாவட்டத்தில் இன்று பிற்பகலுக்கு பிறகு மழை பெய்து வருவது, மக்களை ஆறுதலடைய செய்துள்ளது.
அக்னி நட்சத்திரம் தொடங்கி கடும் வெயில் வாட்டி வரும் நிலையில், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இன்று பிற்பகலுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
அதை தொடர்ந்து மாலை 5 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்கள் இதனால் நிம்மதி அடைந்தனர்.