இ-சேவை மையமா? ஈ ஓட்டும் மையமா? சோம்பல் முறிக்கும் ஊழியர்களால் மக்கள் அவதி!

இராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் இயங்கி வரும் பொது இ- சேவை மையம், சரியான நேரத்திற்கு திறப்பதில்லை; விரைவாக பணிகளை செய்து தருவதில்லை என்று, பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

 

இராமநாதபுரம் மாவட்டத்தில், இராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் பொது இ- சேவை மையம் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் ஊழியர்கள், சரியான நேரத்தில் மையத்தை திறப்பதில்லை. அப்படியே திறந்தாலும், பொதுமக்களுக்கான பணிகளை சுறுசுறுப்பாக செய்து தருவதில்லை என்ற குற்றச்சாடு உள்ளது.

 

இதனால், தொலைவில் இருந்து வரும் பொதுமக்கள் கைக்குழந்தையுடன் வெகுநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வெயில் காலத்தில் நீண்ட நேரம் காத்திருப்பதால், அவர்கள் உடல் சோர்வும், மனச்சோர்வும் அடைகின்றனர்.

 

வேலை நேரத்தில் பூட்டிக்கிடக்கும் இராமநாதபுரம் இ-சேவை மையம் முன்பு காத்திருக்கும் பொதுமக்கள்.

 

துரிதமாக செயல்பட வேண்டிய இ-சேவை மையத்தில் பொதுமக்கள் காத்திருந்து, ஈ ஓட்டிக் கொண்டிருக்க வேண்டியுள்ளதாக, பலரும் புலம்புகின்றனர். இதே நிலை இனியும் நீடிக்காதவாறு உரிய நடவடிக்கையை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.


Leave a Reply