காத்திருந்து… காத்திருந்து.. காலங்கள் போனதடி! பிரசாரத்துக்கு வராத ஸ்டாலினால் ஏமாற்றம்!!

பிரசாரத்திற்கு கருமத்தம்பட்டிக்கு ஸ்டாலின் வருவார் என்று பலமணி நேரம் காத்திருந்த தொழிலாளர்கள், கடைசியில் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

 

சூலூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து திமுக தலைவர் இருகூர், வாகராயம்பாளையம், தென்னம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். இரண்டாம் நாளான இன்று, காலை 7.30 மணியளவில் கருமத்தம்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய இருப்பதாக துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

 

இதை முன்னிட்டு காலை 6:00 மணியில் இருந்தே பாதுகாப்பு பணியில், போலீசார் ஈடுபட்டிருந்தனர்.க ட்டிட தொழிலாளர்களும் ஸ்டாலினை பார்க்கும் ஆர்வத்துடன் வேலைக்கு செல்லாமல் காத்திருந்தனர். ஆனால்,காலை 9.30 மணியாகியும் அவர் வராததால் ஆர்வத்துடன் வந்திருந்த தொழிலாளர்கள் பலரும் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

 

இனியும் காத்திருக்க முடியாது; காலை சிற்றுண்டி கூட சாப்பிடவில்லை; இனியாவது கிளம்பினால் தான் இன்றைய வேலைக்கு செல்ல முடியும் என்று முணுமுணுத்தவாறு, அவர்கள் கலைந்து சென்றனர். இதுபற்றி திமுகவினரிடம் விசாரித்ததில் கலங்கல்,பட்டணம்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டாலின் பிரச்சாரத்தை மாற்றி அமைத்து விட்டதாக தெரிவித்தனர்.


Leave a Reply