அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு எதிராக சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
அதிமுக அதிருப்தி எம்.எம்.ஏ.க்கள் கள்ளக்குறிச்சி அ.பிரபு, விருத்தாசலம் வி.டி.க லைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி ஆகியோர் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சட்டசபை சபாநாயகர் தனபாலை சந்தித்து அதிமுக கொறடா ராஜேந்திரன் புகார் அளித்தார்.
அதை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், விளக்கம் கேட்டு 3 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பினர். பதில் அளிக்க ஒரு வார அவகாசம் தரப்பட்டுள்ளது. சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக அதிருப்தி அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில், எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு எதிராக சபாநாயகர் தனபால் அனுப்பிய நோட்டீஸுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.