துரைமுருகனின் பகல் கனவு நிச்சயம் பலிக்காது! பா.ம.க தலைவர் ஜி.கே.மணி பதிலடி!!

இன்னும் 25 நாட்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்ற திமுக பொருளாளர் துரைமுருகனின் பகல் கனவு நிச்சயம் பலிக்காது என்று, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.

 

கோவை மாவட்டம் சூலூரில், பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் கூட்டம், அதன் மாநில துணைச்செயலாளர் ரகுபதி தலைமையில் நடைபெற்றது. இதில், அதிமுக வேட்பாளர் வி.பி.க ந்தசாமி வெற்றி பெற செய்வது பற்றி ஆலோசனை நடத்தினர்.

 

பின்னர், பா.ம.க தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் பேசியதாவது: மக்களவை மற்றும் 18 சட்டசபை இடைத்தேர்தல்கள் மற்றும் நடைபெற உள்ள 4 இடைத்தேர்தல்களில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி, மத்தியில் மோடியின் பா.ஜ.க ஆட்சி அமையும்.

 

சூலூர் தொகுதி எம்.எல்.ஏ கனகராஜ் மறைவால், அவரது சித்தப்பா மகன் கந்தசாமி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஆளுங்கட்சி வேட்பாளர் தேர்தலில் வென்றால் தொகுதி மக்களுக்கு நல்லது செய்வார் என்ற காரணத்தாலும், அனுதாபத்தாலும், சூலூர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கந்தசாமி வெற்றி பெறுவது உறுதி.

 

சூலூர் தொகுதியை ஜெயித்து கொடுத்தால் அடுத்த 25 நாட்களில் ஆட்சி மாற்றம் நிகழும்; அதற்கு தான் பொறுப்பு என்று துரைமுருகன் இங்கு தான் பேசினார். அது பகல் கனவு, நிச்சயம் பலிக்காது. இவ்வாறு ஜி.கே. மணி தெரிவித்தார்.


Leave a Reply