மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரி! போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாணவிக்கு, கோவில் வளாகத்தில் பாலியல் தொல்லை செய்த கோவில் பூசாரி மீது, போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

 

இது தொடர்பாக, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் தலைவி ஆர்.மைதிலி, திருப்பூர் மாவட்டச் செயலாளர் எஸ்.பவித்ராதேவி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:

 

திருப்பூரில், கோவில் ஒன்றில் வழிபடச் சென்ற 8ஆம் வகுப்பு மாணவிக்கு பிரசாதம் தருவதாகச் சொல்லி, அங்குள்ள பூசாரி பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதை, தன் பெற்றோரிடம் மாணவி தெரிவித்ததுடன், அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு அந்த பூசாரியை தனி அறையில் பூட்டி வைத்து, திருப்பூர் ஊரக காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

 

சிறுமியிடம் பாலியல் தொல்லை தந்த பூசாரி மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, சிறுமியின் எதிர்காலம் பாதிக்கும் என்று கூற், குற்றவாளியை காப்பாற்ற போலீசார் முயல்வதாகத் தெரிகிறது. இது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

 

காவல்துறையே இதுபோன்ற சம்பவங்களில் சட்டப்படி செயல்படாமல் பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்தி, மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து செய்து சமரசமாகப் போகச் சொல்வது போன்ற இழிவான நடவடிக்கைகளில் ஈடுபடுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.

 

பாதிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆட்படும் சிறுமிக்கு உரிய நியாயம் கிடைக்க காவல் துறை நடவடிக்கை எடுப்பதை, மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.


Leave a Reply