நீட் தேர்வில் இந்தாண்டும் ஆரம்பமானது குழப்பம்! கடைசி நேரத்தில் தேர்வு மையங்கள் மாற்றியமைப்பு!

இந்தாண்டும் நீட் தேர்வு தொடங்கும் முன்பே குழப்பங்கள் துவங்கிவிட்டன. தேர்வுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், மதுரை, திரு நெல்வேலி மாவட்டத்தில் சில மையங்கள் மாற்றப்பட்டுள்ளன.

 

நீட் தேர்வு எழுதுபவர்களின் ரோல் எண்கள் 410602881 முதல் 410603660 வரை உள்ளவர்களுக்கு, மதுரை விராகனூர் வேலம்மாள் நகரில் உள்ள மதுரை – ராமேஸ்வரம் உயர் நிலைப்பள்ளி தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது, அதே பகுதியில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளது.

 

மேலும், ரோல் எண்கள் 410608041 முதல் 410608640 வரை உள்ளவர்களுக்கு, திருநெல்வேலி தியாகராஜா நகரில் உள்ள புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அது தற்போது மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி மதுரை அ.வளையாபட்டி அழகர் கோவிலில் உள்ள பாண்டுகுடி ஸ்ரீலட்சுமி நாராயணா வித்யாலயா பள்ளி, தேர்வு மையமாக செயல்படும்.

 

அதேபோல், ரோல் எண்கள் 410611401 முதல் 410611880 வரை உள்ளவர்களுக்கு மதுரை நரிமேடு பி.டி. ராஜன் சாலை கேந்திர்யா வித்யாலயா தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அது தற்போது மதுரை விராகனூர், மதுரை – ராமேஸ்வரம் நெடுஞ்சாலை வேலம்மாள் நகரில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

 

ரோல் எண்கள் 410611881 முதல் 410612360 வரை உள்ளவர்களுக்கு மதுரை பி.&டி. எக்ஸ்டன்சன் பகுதி புனித மைக்கேல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, மதுரை எய்ம்ஸ் ரோடு, தனபாண்டியன் நகர் தனபாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

ரோல் எண்கள் 410612841 முதல் 410613320 வரை உள்ளவர்களுக்கு மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள கேந்திரியா வித்யாலயா தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை திருநகர் 3வது நிறுத்தம் அருகேயுள்ள சி.எஸ். ராமசாரி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

ரோல் எண்கள் 410616201 முதல் 410616560 வரை உள்ளவர்களுக்கு, ஏற்கெனவே மதுரை ராஜ்ஸ்ரீ கார் கேரில் உள்ள கோபால கிருஷ்ணநகரில் உள்ள மகாத்மா மாண்டசெரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மதுரை நாகமலை மேற்கு, மேலகுயில்குடி சாலையில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ. பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று என்.டி.ஏ. தெரிவித்துள்ளது.


Leave a Reply