பாரதிய ஜனதாவில் ஓ.பி.எஸ். இணைவது 100% உண்மை! தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் தடாலடி

“ஓ.பன்னீர் செல்வம் பாரதிய ஜனதாவில் இணைவார் என்பது, 100% உண்மை” என்று அ.ம.மு.க. கொள்கைப் பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

 

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், பாரதிய ஜனதா கட்சி தலைவர்களுடன் நெருங்கிய நட்பு வைத்துள்ளார். மோடி வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தனது குடும்பத்தாருடன் ஓ.பி.எஸ். சென்று, அதிமுகவினரை ஆச்சரியப்பட வைத்தார்.

 

இதற்கிடையே, ஓ.பி.எஸ். பாரதிய ஜனதா கட்சியில் இணையவுள்ளதாக, ஒரு பேச்சு அடிபட்டது. இதை திட்டவட்டமாக மறுத்து, விரிவான அறிக்கையை ஓ.பி.எஸ். வெளியிட்டார். அதில், உயிர் போகும் தருணத்தில் தனது உடலில் அதிமுக கொடி தான் இருக்க வேண்டுமென்று, உருக்கமுடன் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்நிலையில், ஓ.பி.எஸ். அறிக்கை குறித்து, அ.ம.மு.க. கொள்கைப்பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருப்பதாவது:

 

பா.ஜ.க.வுடன் அவருக்குள நெருக்கம் பற்றி நான் சொன்னதற்கு, எனது கருத்து முட்டாள்தனமானது என்று சொல்லிவிட்டு, ஓ.பி.எஸ். இப்போது விரிவான அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் உள்ள வாசகங்கள் பொய்யானவை. பதவிக்காக எதையும் செய்யக்கூடியவர் ஓ.பி.எஸ். முதலில் அதிமுகவை ஊழல் கட்சி என்று கூறி தர்மயுத்தம் நடத்தியவர், பின்னர் துணை முதல்வர் பதவி பெற்றது சந்தர்ப்பவாதம்.

 

பாரதிய ஜனதா கட்சி, ஓ.பி.எஸ்.ஐ வைத்து தான் அதிமுகவை இயக்குகிறது. ஓ.பி.எஸ். அந்த கட்சியில் இணைவார் என்பது100% உண்மை. தேர்தல் தோல்வி பயத்தால், தனது சொத்துக்களை பாதுகாக்க, அவர் பாஜகவில் இணைய திட்டமிட்டுள்ளதக, தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.


Leave a Reply