திருச்சி, கும்பகோணம், காரைக்காலில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை

கொலை வழக்கு தொடர்பாக, திருச்சி, கும்பகோணம், காரைக்காலில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

கும்பகோணத்தில், மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திருபுவனத்தை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம் என்பவர், பிப்ரவரி 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதை கண்டித்து அப்பகுதி மக்கள், திருபுவனத்தில் கடையடைப்பும், மறியலும் நடத்தினர்.

 

அண்மையில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. கொச்சியில் இருந்து ஏ.எஸ்.பி. சவுகத் அலி தலைமையிலான குழு, ராமலிங்கத்தின் மகன், மனைவியிடம் விசாரணை நடத்தியிருந்தது.

 

இந்த நிலையில், திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திருச்சி, கும்பகோணம் மற்றும் காரைக்காலில் 10-க்கும் மேற்பட்ட நபர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

 

திருச்சி பாலக்கரையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம், கும்பகோணம் பழைய மீன் அங்காடி அருகே உள்ள எஸ்.டி.பி.ஐ. அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply