அமெரிக்கா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச்சூடு! மாணவரின் கொலைவெறிக்கு இருவர் பலி

அமெரிக்காவில், பல்கலைக்கழகம் ஒன்றில் மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர்; 4 பேர் காயமடைந்தனர்.

 

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் என்பது சர்வ சாதாரணமாக அரங்கேறுகிறது. அதிலும் குறிப்பாக கல்வி நிறுவனங்கள், பள்ளிகளில் கூட துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்கி, விபரீதங்கள் நடப்பது வழக்கமாக உள்ளது.

 

அதேபோல் சம்பவம் தற்போது அமெரிக்காவின் வடக்கு கரோலினா சார்லோட் பல்கலைக்கழகத்தில் நடந்துள்ளது. அங்கு ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்; 2 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். லேசான காயம் அடைந்த இருவருக்கு, முதலுதவி சிகிச்சை தரப்பட்டது.

 

அமெரிக்காவில், நடப்பு கல்வியாண்டின் கடைசி நாளில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அவர், 22 வயதான அதே பல்கலைக்கழகத்தின் வரலாறு பயின்று வரும் மாணவர் என்று தெரியவந்துள்ளது.

 

துப்பாக்கிச்சூடு நடந்ததும், பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து கைகளை தூக்கிய படி மாணவர்கள் பதற்றத்துடன் ஓடும் காட்சிகள், சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.


Leave a Reply