சூலூர் திமுக வடக்கு ஒன்றியத்தில் இடைத் தோ்தல் காரியாலயம் திறப்பு

சூலூர் வடக்கு ஒன்றியம் பகுதிகளில் திமுக இடைத்தேர்தல் அலுவலகத்தை சூலூர் இடைத்தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு திறந்துவைத்தார்.

 

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி சூலூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அருகம்பாளையத்தில் பிரச்சாரத்தை ஆரம்பித்து, ராசிபாளையம், கணியூர், தென்னம்பாளையம், அரசூர் உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்குசேகரித்தார்.

 

இதேபோல், சூலூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நீலம்பூர், அரசூர் மற்றும் தென்னம்பாளையத்தில் திமுக தேர்தல் அலுவலகத்தை, சூலூர் இடைத்தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். தொடர்ந்து அப்பகுதியின் தேர்தல் பொறுப்பாளர்கள் மத்தியில் எ.வ.வேலு பேசுகையில்;-

 

கடந்த தேர்தலில், சூலூர் வடக்கு பகுதியில் வாக்குகள் குறைவாக பெற்று பின் தங்கியுள்ளதாக தெரிவித்தவர், இப்பகுதியில் தீவிரம் கவனம் செலுத்த வேண்டும். பொதுவானவர்களிடம் வாக்குச்சாவடியில் சேகரிக்க வேண்டும். இந்த பகுதிகளில் 97,98 சதவீதம் அருந்ததியின மக்கள் உள்ளனர். கட்டாயம் அருந்ததியின மக்கள் இருக்கும் பகுதியில் பணியாற்ற வேண்டும். தீரன்சின்னமலை கொங்குவேலால கவுண்டார் வம்சத்தை சேர்ந்தவர், இவருக்கு படை தளபதியாக இருந்தவர் பொல்லான். அருந்ததியினத்தை சேர்ந்த இவருக்கு, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மணி மண்டபம் கட்டப்படும் என திமுக தலைவர் கூறியுள்ளார். இவற்றை அந்த மக்களிடத்தில் கொண்டு சேர்த்து வாக்குகளை சேகரித்தால், அதிக வாக்குகள் பெறுவது நிச்சயம். காலை, மாலையில் உங்கள் விஜயம் அப்பகுதியில் இருக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அருந்தியின மக்கள் வசிக்கும் பகுதியில் சமுதாய கூடங்கள் கட்டப்படும் என்ற உத்திரவாதத்தை தர வேண்டும்.

 

இந்த ஆட்சியில் மத்திய அரசு மூலம் அனுப்பப்படும் எஸ்.சி,எஸ்.டி நிதி பெரும்பாலும் பயன்பட வில்லை. இந்த நிதிகளை பெற்று வீடுகள் கட்டிதரப்படும் என்பதையும் அவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். வாக்குறுதியாக இல்லை செய்து தருவோம் என்ற நம்பிகையுடன் கூறி வாக்கு சேகரியுங்கள் என்று கூறினார்.

 

இந்த நிகழ்ச்சிகளில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எம்.எல்.ஏ.கார்த்திக், மாவட்ட செயலாளர்கள் சி.ஆர்.இராமசந்திரன், முபாரக் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உட்பட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply