விபத்து ஏற்பட்டால் உடனடியாக உயிரை காப்பாற்றுங்கள்: போலீஸ் விசாரணை வராது அமைச்சர் வேலுமணி உத்தரவாதம்

கோவை மாவட்டம் சூலூரில் இடைத்தேர்தல் வரும் மே 19 அன்று நடைபெற உள்ளது.இங்கு அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ கனகராஜின் சித்தப்பா மகன் வி.பி.கந்தசாமி போட்டியிடுகிறார்.அதற்கான வேட்பு மனுவினை கடந்த மாதம் 29 ஆம் தேதி தாக்கல் செய்தார்.

 

நேற்று வேட்பு மனு பரிசீலனையில் அவரின் வேட்பு மனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.இந்த நிலையில் இன்று சூலூர் தொகுதியின் தேர்தல் பணிமனை திறக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.அதனை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

 

பின்னர்,நடந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் வேலுமணி சூலூர் தொகுதி எம்.ஜி.ஆர் காலத்தில் மட்டுமல்லாமல் ஜெயலலிதா அம்மா காலத்திலும் அதிமுக- வின் கோட்டையாகவே உள்ளது.அதிமுக ஆட்சி காலத்தில் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது,

 

அவினாசி-அத்திக்கடவு திட்டத்ததாகவுமஆனைமலையாறு- நல்லாறு திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் எனவும்,சூலூர் தொகுதியில் அதிமுக கூட்டணி ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறும் எனவும் பேசினார்.

 

மேலும்,தான் இக்கூட்டத்திற்கு வரும் வழியில் ஒரு விபத்தில் அடிபட்டு இருவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தாகவும்,அவர்களை சுற்றி நின்று காப்பாற்றாமல் நூற்றுக்கணக்கானோர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாகவும் மன வேதனையுடன் தெரிவித்தார்.

 

பின்னர்,தானும்,தன்னுடன் இருந்தவர்களும் விபத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தார்.

 

அதனால் விபத்தில் அடிபட்டவர்களை காப்பாற்ற உதவி செய்யுங்கள்,போலீஸ் விசாரணைக்கு அழைக்க மாட்டார்கள் எனவும் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்தார்.இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன்,பெஞ்சமின்,ஓ.எஸ்.மணியன்,துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன்,வேட்பாளர் வி.பி்.கந்தசாமி,மாநகர மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி அருண்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply