அதிமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் தந்தால் திமுகவினர் கொந்தளிப்பது ஏன்?: முதல்வர் எடப்பாடி கேள்வி

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் கொடுத்தால் திமுகவினர் ஏன் கொந்தளிக்கிறார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

 

சூலூர் சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக கோவை வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

 

திமுகவுக்கும் தினகரன் கட்சிக்கும் இடையே உள்ள நெருக்கம் தற்போது வெளிப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க. எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் கொடுப்பது, எங்கள் உள்விவகாரம். இதனால் திமுகவினர் ஏன் கொந்தளிக்கிறார்கள். எதிர்கட்சி தலைவருக்கு கோபமும் கொந்தளிப்பும் ஏன் வருகிறது.

 

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் 3 எம்எல்ஏக்கள் மீது கொறடா சபாநாயகரிடம் புகார் தந்தார். சபாநாயகர் மீது திமுக எந்த அடிப்படையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தந்தார் என்று புரியவில்லை.

 

தமிழகத்தில், 22 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். குடிநீர்பிரச்சினை இல்லாமல் பார்த்து கொள்ள, தேர்தலுக்கு முன்பே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.


Leave a Reply