சூடுபிடிக்கும் இரட்டை குடியுரிமை சர்ச்சை! ராகுல் காந்திக்கு மத்திய அரசு நோட்டீஸ்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்பு படம்


இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

 

லண்டனில் உள்ள பேக்உப்ஸ் என்ற நிறுவனத்தில், இங்கிலாந்து குடிமகன் என்று ராகுல் காந்தி தன்னை குறிப்பிட்டுள்ளதாக கூறி, ஒரே நேரத்தில் இந்திய குடியுரிமையும் பெற்றுக் கொண்டு நாடாளுமன்ற உறுப்பினராக ராகுல் உள்ளதாக, பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி புகார் கூறியிருந்தார்.

 

ராகுல் காந்தி, இங்கிலாந்து குடியுரிமை பெற்றது குறித்து விசாரணை நடத்த வேண்டும்; எம்.பி. பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று கேட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சுப்ரமணியன் சுவாமி கடிதமும் எழுதியிருந்தார்.

 

இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு, ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு 15 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.

 

ராகுல் காந்தி மீதான இரட்டைகுடியுரிமை பிரச்சனை மீண்டும் சூடுபிடித்துள்ளது, டெல்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Leave a Reply