சூலூரில் திமுக வேட்பாளருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் ,இடையே கடும் மோதல்

திமுக வேட்பாளர் பொங்கலூர் வேட்பு மனுத்தாக்கலுக்கு வந்த போது நாம் தமிழர் கட்சியினருக்கும்,திமுக வினருக்குமிடையே வாக்குவாதம்.தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சூலூர் சட்டமன்றத்தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 22 ஆம் தேதி துவங்கியது.நேற்றுவரை 7 சுயேட்சைகள் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.இந்த நிலையில் இன்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் விஜயராகவன்,இந்து மக்கள் கட்சியை சேர்ந்த பொன்.கார்த்திகேயன்,சுயேட்சை வேட்பாளர் பிரபாகரன் உள்ளிட்டோர் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமி தொகுதி பொறுப்பாளரும்,முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு உள்ளிட்ட நிர்வாகிகளுடன் வேட்பு மனுத்தாக்கல் செய்ய வந்தார்.அப்போது,காவல் துறையினர் திமுக வேட்பாளரின் காரை சூலூர் தாலுகா அலுவலகத்திற்குள்ளே அனுமதித்ததாகவும்,வேட்பு மனுத்தாக்கலின் போது தேர்தல் ஆணையம் அனுமதித்ததை விட அதிகமான ஆட்களை அனுமதித்ததாகவும் கூறி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் விஜயராகவன் உள்ளிட்ட கட்சியினர் திமுக வினருக்கும்,காவல் துறையினரையும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் காவல் துறையினருக்கும்,நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனால் அங்கு சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Leave a Reply