இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு! ஏராளமானோர் பலி; பதற்றம் நீடிப்பு

இலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயம், ஓட்டல் உள்ளிட்ட பல இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

 

தலைநகர் கொழும்புவில் உள்ள கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயத்தில் ஈஸ்டரை முன்னிட்டு ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் பலர் தூக்கிவீசப்பட்டனர். கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

 

அதேபோல் கொச்சிக்கடை, கட்டுவாபிட்டியா உள்ளிட்ட இடங்களில் தேவாலயங்களை குறிவைத்து தாக்குதல் நடந்துள்ளது. ஈஸ்டர் திருநாளில் இலங்கையில் பல்வேறு தேவாலயங்களில் குண்டுவெடிப்பு நடந்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

 

காயமடைந்தவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.


Leave a Reply