திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் திருக்கல்யாணம் நிழ்ச்சி நடைபெற்றது.

திருவாடானை தாலுகா திருவெற்றியூர் சிவகங்கை தேவஸ்தான சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பாகம்பிரியாள் கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வோர் நாளும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து . சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

சித்திரை திருவிழாவின் ஓர் அங்கமாக இரவு அருள்மிகு வல்மீகநாத சுவாமி அருள்மிகு பாகம்பிரியாள் அம்பாளுக்கு திருக்கல்யான வைபவம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் திருக்கல்யாணம் சனி கிழமை இரவு நடைபெற்றது. 9ம் நாள் திருவிழாவாக திருத்தேர் பவனி நடைபெறும். திருக்கல்யாண வைபவத்தில் திருவெற்றியூர் சுற்றுவட்டார பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அருள் பெற்றுச் சென்றனர்

-அனல் ஆனந்த் ஆடானை


Leave a Reply