மேட்டுப்பாளையத்தில் காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு!

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களைவை தொகுதிகள் மற்றும் காலியாக உள்ள 18 சட்டமன்றத்தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் பரப்புரை அனல் பறந்து கொண்டு உள்ளது.தேர்தலில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

தேர்தலில் பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய அரசின் துணை ராணுவப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அதன்படி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று பெரியநாயக்கன் பாளையம் காவல் துறை துணைக்கண்காணிப்பாளர் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் மற்றும் 500 துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம் இன்று நடைபெற்றது.இந்த ஊர்வலமானது மேட்டுப்பாளையம் உதகை செல்லும் சாலையில் உள்ள மைதானத்தில் துவங்கி பேருந்து நிலையம் வழியாக நகரின் முக்கிய பகுதிகளின் வழியாக சென்று கடைசியாக காவல் நிலையத்தில் முடிவடைந்தது.இதில் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சென்னகேசவன் உட்பட 6 காவல் காவல் ஆய்வாளர்கள் உட்பட ஆண்,பெண் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Leave a Reply