மண்ணைப் புண்ணாக்கும் பிளாஸ்டிக் பைகள்! கால்நடைகளை காவு வாங்க காத்திருக்கும் இராமநாதபுரம் நகராட்சி!!

இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் பகுதிகளை 1985இல் பிரித்து சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த இராமநாதபுரம் மாவட்ட பகுதி இராமநாதபுரம் நகராட்சி கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 2 மீட்டர் 6 அடி உயரத்தில் அமைந்துள்ள நகராட்சி ஆகும் இங்கு சராசரி கல்வியறிவு 79 சதவிகிதம் ஆண்கள் 50 சதவிகிதம் பெண்கள் 50% இதில் ஆண்களின் கல்வியறிவு 84% பெண்களின் கல்வியறிவு 74 சதவிகிதம் இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட அதிகமானது. இதில் 11 சதவிகிதம் ஆறு வயதிற்கு உட்பட்டோர் ஆவார்கள் மேலும் சுகாதாரச் சீர்கேடு உச்சம் பெற்று வரும்.
இராமநாதபுரம் நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன் குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் ஒருவர் இறந்த நிலையில் ஒரு வாரத்திற்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு மக்கள் இன்றும் மீளா துயரத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி , கீழக்கரை, ராமேஸ்வரம், பரமக்குடி ஆகிய நகராட்சிகள் உள்ளன. இதில் ராமநாதபுரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. பாதாள சாக்கடை திட்டம், காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட இணைப்புகள், கட்டுமான ஒப்புதல்,
வீடு, தொழில், காலி மனை உள்ளிட்ட இனங்கள் மூலம் நகராட்சிக்கு வருவாய் கொழிக்கிறது. 33 வார்டுகளிலும் துப்புரவு பணிகள் கண்டு கொள்ளப்படாததால் அனைத்து பகுதிகளிலும் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பாதாள சாக்கடை குழாய்களில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், நகரின் பல வார்டு களில் சாலைகளில் கழிவு நீர் தேங்கி நோய் பரப்பும் கேந்திரமாக மாறி உள்ளது. குப்பை தொட்டிகளில் குவிந்துள்ள கழிவுகளில் இரை தேடும் நாய்கள், பன்றிகளால் தொற்று நோய் பரவும் அச்சமும் மக்களிடம் நிலவுகிறது.


மேலும் அரசு அலுவலகங்கள் உள்ள பகுதிகளில் குவிந்துள்ள குப்பையைக் கூட நகராட்சி பணியாளர்களால் அப்புறப்படுத்தப்படாமல் நாள் கணக்கில் தேங்கிக் காணப்படுகிறது இதுகுறித்து தற்போது இராமநாதபுரத்தின் நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுள்ள சுப்பையா அவர்களிடம் இதுகுறித்து துரித நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு அமைப்புகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் கூறியதாக கூறப்படுகிறது ஆனால் அவர் பணியில் சேர்ந்த கடந்த சில நாட்களாக பொதுமக்களிடம் வரும் புகார்களை எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யாமலும் நகராட்சி ஊழியர்களை அழைத்து இதுவரை அனைத்து வார்டுகளையும் சுகாதாரம் சீர்கெட்ட நிலையில் இருக்கும் பகுதிகளை சுத்தம் செய்ய இதுவரை அவர் அறிவுறுத்தியதாக இல்லை என்று கூறப்படுகிறது இதுகுறித்து நமது குற்றம் குற்றமே புலனாய்வு வார இதழின் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் நாம் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக பல்வேறு பகுதிகளாக சென்று ஆராய்ந்து வந்தோம் ஆராய்ந்து வந்த நிலையில் அதே நிலைமை சுகாதாரமற்ற முறையில் காணப்பட்டு வந்ததை உறுதி செய்யப்பட்டன. மேலும் அவற்றை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து நகராட்சி நிர்வாக ஆணையர் பொறுப்பேற்றுள்ள சுப்பையா அவர்களிடம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம் ஆனால் அவரோ நான் 33 வருட அனுபவமும் வாய்ந்தவன் என்றும் நான் இராமநாதபுரத்தில் அமைச்சர் மணிகண்டனின் ஆதரவாளர் என்றும் நான் பார்க்காத மாவட்ட ஆட்சியரும் இல்லை நான் பார்க்காத பத்திரிக்கைகளும் கிடையாது.
என்று கூறி உதாசீனப்படுத்தி வெளியேற்றினர். மேலும் அந்தந்த பகுதிகளை மேலும் கண்காணிக்க தொடங்கினோம் ஆனால் அவர் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை இவர் தற்போது தான் இந்த இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் நகராட்சியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே மதுரையிலும் மற்றும் உசிலம்பட்டியில் பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் என்று கூறப்படுகிறது இவர் ஆளும் கட்சியின் ஆதரவாளர் என்று மறைமுகமாகவும் நேரடியாகவும் அரசு அலுவலகங்களில் தெரிவித்து வருவதால் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள்முதல் பொதுமக்கள் வரை அதிருப்தியுடன் காணப்படுகிறார்கள்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் நம்மிடம் கூறுகையில், இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக உள்ள மணிகண்டன் பெயரை களங்கம் விளைவிக்கும் வகையில் இவரின் செயல்பாடு உள்ளது, உடனடியாக மாவட்ட ஆட்சியரும் இராமநாதபுரத்தின் மண்ணின் மைந்தன் என்று அழைக்கப்பட்டு வரும் அமைச்சர் மணிகண்டன் இருவரும் இந்த புதிய நகராட்சி ஆணையரை வேறு பகுதிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply