தேர்தலுக்கு பின் எடப்பாடியின் வாழ்க்கையே கிழியப் போகிறது: ஸ்டாலின் ஆவேச பதிலடி

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு முதல்வர் எடப்பாடியின் வாழ்க்கை தான் கிழியப் போகிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

 

அண்மையில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டங்களில் உரையாற்றும் போது ஸ்டாலின் தனி நபர் தாக்குதல் நடத்தி அநாகரீகமாக நடந்து கொள்கிறார்.  நாங்கள் பதிலடி கொடுத்தால் ஸ்டாலினின் காது கிழிந்துவிடும் என்று கூறியிருந்தார்.

 

இந்நிலையில் திருத்தி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து பேசிய ஸ்டாலின், எடப்பாடியின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது:-

 

தி.மு.க. தேர்தல் அறிக்கையையும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையும் திராவிட இயக்கத்தின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் உள்ளன. ஆனால், அ.தி.மு.க. – பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கைகளோ முரண்பாடுகளின் மொத்த உருவமாக உள்ளது.

 

எனது காது ஜவ்வு கிழிந்துவிடும் என்று முதலமைச்சர் பேசுகிறார். அவரது பேச்சு நாலாந்தரமாக உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு எடப்பாடி பழனிசாமியின் வாழ்க்கையே கிழியப் போகிறது.

 

திமுகவினர்  தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து செல்லக்கூடியவர்கள் அல்ல, நாங்கள் எப்போதும் மக்களோடு, மக்களாக இருப்போம்.

 

இவ்வாறு அவர் பேசினார்.


Leave a Reply