‘தண்ணி’ கிடைக்குது; தண்ணீர்தான் கிடைக்கல! நடிகை கோவை சரளா கலகல பிரசாரம்

தமிழ்நாட்டில் தண்ணீருக்கு தட்டுப்பாடு இருக்கிறது; டாஸ்மாக் தண்ணிக்கு தட்டுப்பாடு இல்லை என்று, பிரசாரத்தின் போது அரசை கிண்டலடித்து நடிகை கோவை சரளா வாக்கு சேகரித்தார்.

 

மக்களவை தேர்தல் தேர்தல் பிரசாரம் முடிய சில தினங்களே உள்ள  நிலையில் தமிழகத்தில் பிரசாரம் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மையத்தின் சார்பில், கோவை மக்களவை தொகுதியில் டாக்டர் மகேந்திரன் போட்டியிடுகிறார்.

 

அவரை ஆதரித்து திரைப்பட நடிகையும், மக்கள் நீதி மையத்தின் நட்சத்திர பேச்சாளருமான கோவை சரளா இன்று கோவை, கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

 

பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் அவர் பேசுகையில் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, தண்ணீருக்கு தட்டுப்பாடு உள்ளது. நான் அந்த தண்ணிய சொல்லவில்லை; அது டாஸ்மாக்கில் தாராளமாக கிடைக்கிறது என்று சினிமா பாணியில் நக்கலடித்து பேசினார். பிரசாரத்தின் போது குழந்தைகள், பொதுமக்களுடன் கை குலுக்கி வாக்கு சேகரித்தார்.


Leave a Reply