வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த சிறுவன் உட்பட மூன்று பேர் வீச்சருவாள்களுடன் கைது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வடமதுரை அம்பாத்துரை ரெட்டியார்சத்திரம் ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக ஒரு மர்ம கும்பல் கத்தி அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் இருசக்கர வாகனங்களில் சாலைகளில் தனியாகச் செல்லும் பொது மக்களிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டியும் ஆயுதங்களில் தாக்கியும் போதையில் பொதுமக்களிடம் இருந்து நகை பணம் செல்போன்கள் இரு சக்கர வாகனங்களை மறித்து சென்ற சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்தந்த காவல் நிலையங்களில் இது சம்பந்தமாக புகார்கள் இருந்து வந்த நிலையில் வேடசந்தூர் நான்கு வழிச்சாலையில் வடமாநிலத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர்கள் இடம் அரிவாளால் தாக்கி அவரிடமிருந்த கையில் காயங்களை ஏற்படுத்தி பணம் நகை பறிமுதல் செய்துள்ளார்கள் இதைத் தொடர்ந்து நான்கு வழிச்சாலையில் லாரி ஷெட் வைத்திருக்கும் ஷாஜகான் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் உத்தரவின் பேரில் வேடசந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையிலான தனிப்படை பிரிவினர் கடந்த ஒரு வாரமாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்த போது திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா என்ற இடத்தில்
செல்லாண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆதித்யா விஜய பாண்டியன் அசோக்குமார் ஆகிய மூன்று வாலிபர் இவர்களுடன் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்தஅவர்களிடமிருந்து தங்க மோதிரம்1
வெள்ளிசெயின்1 மோதிரம் 1
செல்போன்கள்12 வீச்சருவாள் 2
இருசக்கர வாகனங்கள் 4
ஆகிய பொருட்களை பறிமுதல் செய்தனர்கள் தேர்தல் நேரத்தில் பகுதியில் நான்கு வழிப்பறிக் கொள்ளையர்கள் கைது செய்த சம்பவம் குறித்து வேடச்சந்தூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


Leave a Reply