மேற்கு தொடர்ச்சிமலையில் பயங்கர காட்டுத்தீ! அரிய வகை மூலிகை செடிகள் அழிந்து நாசம்

கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயை அணைக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதில் அரியவகை மூலிகை செடிகள் எரிந்து நாசமாகின.

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதி,  மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அடிவாரப்பகுதியில் அமைந்துள்ளது. மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட  ஜக்கனாரிபிரிவு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், இன்று அதிகாலை லேசாக வெண்புகை காற்றில் கலந்து வந்தது.

 

சிறிது நேரத்தில் காய்ந்த செடி கொடிகளில் தீப்பற்றி, மளமள என எரியத் தொடங்கியது. தீயின் வெப்பத்தை தாங்க முடியாமல் வனவிலங்குகள் பாதுகாப்பு தேடி மாற்று இடத்தை நோக்கிச் சென்றன.

 

 

தகவல் அறிந்து  மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையில் வனத்துறையினர், தன்னார்வலர்கள் உள்பட 40 க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

செடி கொடிகளால் அடித்தும், தீத்தடுப்பு கோடுகள் அமைத்தும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  இதில் அரியவகை மூலிகைச்செடிகள், பறவை இனங்கள் கருகி சாம்பலாகியுள்ளன.


Leave a Reply