மனைவியை எரித்துக்கொல்ல முயன்ற கணவர் கைது

தொண்டி அருகே உள்ள குருமிலாங்குடியை அடுத்த பழங்குளத்தைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது42). இவரது மனைவி பிரியா (32). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

கோவையில் இருந்து திரும்பிய மாதேஸ்வரன் வேலைக்கு செல்லாமல் மனைவியிடம், உன் வீட்டில் பணம் வாங்கி வா என அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

சம்பவத்தன்று பணம் வாங்கி வர மறுத்த மனைவி பிரியா மீது மாதேஸ்வரன் ஆத்திரம் அடைந்தார்.

மது குடித்து விட்டு வந்து பிரியா உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துள்ளார்.அலறி துடித்த பிரியாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தீக்காயத்துடன் பிரியா கொடுத்த புகாரின்பேரில் தொண்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் காமாட்சி நாதன் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மாதேஸ்வரனை தேடி வந்தார்.

இந்த நிலையில் அவர் ஊருக்கு அருகில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாதேஸ்வரனை போலீசார் கைது செய்தனர்.


Leave a Reply