ஆறாம் வகுப்பு சேரும் அனைத்து மாணவர்களுக்கும் 2000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் பள்ளி..!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு சேரும் அனைத்து மாணவர்களுக்கும் 2000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 90 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் விதமாக பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் பள்ளியில் சேர்ந்த ஆறாம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு 2000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க முடிவெடுத்துள்ளன.
இதுகுறித்து கூறியிருக்கும் ஆசிரியர்கள் கடந்த ஆண்டு 1,000 ரூபாய் வழங்கி வந்ததாகவும் இந்த ஆண்டு 2 ஆயிரம் ரூபாயுடன் கிராமப்புறங்களுக்கு நேரில் சென்று மாணவர் சேர்க்கை அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர்.







