கொரோனா பரிசோதனையை அதிகரிக்க தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினுக்குகள்..!
கொரோனா பரிசோதனையை அதிகரிக்க தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினுக்குகள் அமைக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கொரொனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் உடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
அப்போது பேசிய அவர் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத பகுதிகளில் 2000 மினி கிளினுக்குகள் அமைக்கப்படும் என தெரிவித்தார். பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதால் கொரொனா பரவ வாய்ப்பு இருப்பதாகவும் எனவே சிகிச்சைக்கான படுக்கைகளை அதிகரிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
மக்கள் அதிகம் கூடும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மெரினா கடற்கரையில் மக்கள் கூடுவதை தடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தினார்.
டெங்கு கொசுவை ஒழிக்க தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.







