புதுச்சேரியில் 20 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு..!
புதுச்சேரியில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 20 பேர் வரையில் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்த அரசின் தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புதிய ஆளுநர் மாளிகையில் பேஸ்புக் மூலம் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடக்கிவைத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுவையில் கருப்பு பூஞ்சை வேகமாக பரவுவது கவலை தருவதாக தெரிவித்தார்.
அரசு ஊழியர் உட்பட 20 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் எனவே தொடக்க நிலையிலேயே சிகிச்சை பெற வசதியாக இந்த நோய் தாக்குதலுக்கு ஆளானோர் உடனடியாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.




