இந்தியாவில் தடுப்பு ஊசிகள் போடுவதை அதிகரிக்காவிட்டால் கொரொனா 3வது அலைக்கு வாய்ப்பு..!
இந்தியாவில் தடுப்பு ஊசிகள் போடுவதை அதிகரிக்காவிட்டால் கொரொனா 3வது அலை தாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானி எச்சரித்துள்ளார். இந்தியா கொரொனா தொற்று முதல் அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது.
ஆனால் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முடியாத வகையில் ஒரு போராட்டத்தை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதுகுறித்து சூத்திரதாரி விஞ்ஞானி வித்யாசாகர் கூறுகையில் இந்தியாவில் தடுப்பூசிகளை போடுவதையும், கட்டுப்பாடுகளை ஒழுங்கா பின்பற்றாவிட்டால் 8 மாதங்களில் மூன்றாவது அலைக்கு வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் எங்கள் மாதிரிகளில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தடுப்பூசி அம்சங்களையும் சேர்த்துக் கொண்டிருக்கிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.




