--- --:--:-- --

ஆந்திராவில் பரவிய மர்ம நோயால் 20 பேர் பாதிப்பு..!

11

ந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மர்ம நோய் பரவியதில் 20 பேர் பாதிப்படைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பூலா என்ற அந்த கிராமத்தில் கடந்த 17ஆம் தேதி 10 பேர் திடீரென மயங்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் இன்று காலை மேலும் 10 பேர் திடீரென மயக்கமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். டிசம்பர் மாதம் வேலூரில் இதேபோன்று மர்ம நோயால் பாதிக்கப்பட்டு பலர் திடீர் திடீரென மயங்கி விழுந்த காட்சிகள் வெளியாகின.

 

அதே பாணியில் இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதால் மாநில அரசு சார்பில் அந்த பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

Leave a Reply

Right Menu Icon