தெளிவான பார்வை சீனாவுக்கு இருப்பதுபோல இந்தியாவிடம் இல்லை..!
உலகை எப்படி வடிவமைக்க வேண்டும் என்ற தெளிவான பார்வை சீனாவுக்கு இருப்பதுபோல இந்தியாவிடம் இல்லை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தற்போது இந்தியா முழுமையாக மூழ்கி கிடக்கிறது.
பிரச்சினைகளை தீர்க்க பலவற்றை புறக்கணிக்கவும் அதிகரித்திருக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார். விவசாயிகள் பிரச்சினை மட்டுமல்ல எதிர்கால சந்ததியினருக்கான வேலைவாய்ப்பு பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படாமல் இருக்கிறது.
நிலைமை இப்படியே நீடித்தால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ராகுல் தெரிவித்துள்ளார். சீனா குறித்து பேசிய அவர் உலகை எப்படி வடிவமைக்க வேண்டும் என்ற தெளிவான பார்வை சீனாவுக்கு இருப்பதுபோல இந்தியாவிடம் இல்லை என குற்றம் சாட்டினார்.
ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. ஆனால் அது சரியாக எடுபடவில்லை.






