--- --:--:-- --

பைக் விபத்தில் பெற்றோர் கண் முன்னே உயிரிழந்த 2 வயது குழந்தை..!

2

சென்னை ஈசிஆரில் அதிவேகமாக வந்த பைக் விபத்தில் முன்னாள் சென்ற மற்றொரு பைக் மீது மோதிய விபத்தில் தாய் தந்தை கண்முன்னே 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

பாலவாக்கத்தில் சேர்ந்த சாது என்பவர் தனது மனைவி நந்தினி 2 வயது மகன் தட்சன் உடன் சினிமாவுக்கு செல்வதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது பனையூர் 12வது சந்திப்பு அருகே சென்ற பொழுது அதே மார்க்கத்தில் பின்னால் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கினார்.

 

விபத்தில் சிக்கிய ஒரு பைக் முன்னால் சென்று கொண்டிருந்த சாதுவின் பைக்கில் வேகமாக மோதியுள்ளது. இதில் நந்தினி மடியில் அமர்ந்திருந்த தட்சன் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளான். வாகன ஓட்டிகள் 3 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி நிலையில் வரும் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது.

Right Menu Icon