--- --:--:-- --

கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற 2 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்..!

2

ரசின் உத்தரவை மீறி கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிச் சென்ற 2 ஆம்னி பேருந்தை போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்திலிருந்து எடுக்கப்பட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றி செல்வதாக புகார்கள் எழுந்தன.

 

வண்டலூர் சாலையில் நசரத்பேட்டை பகுதியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 2 ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த பேருந்தை பறிமுதல் செய்தனர்.

 

Right Menu Icon