15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ் பனிப்பாறையில் கண்டுபிடிப்பு..!
நாட்டிலுள்ள திபெத்திய பனி பாறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பனிப்பாறைகள் குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டு இருந்தனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு மேற்கு சீன பகுதி கடல் மட்டத்திலிருந்து 22 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள பனிப் பாறை மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வந்தன. அதில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வைரஸ்கள் இருந்தது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக இருப்பது தெரியவந்துள்ளது. கண்டறியப்பட்ட வைரஸ்களில் 33 வைரஸ்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவற்றில் 4 ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






