தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு..!
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு குறித்த இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகள் மற்றும் திரையரங்குகள் திறப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் கொரொனா பரவல் குறைந்துள்ளதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடைகள் வழக்கம் போல் திறப்பு. ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து என தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. ஊரடங்கு தளர்வுகளால் பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது இருந்து வரும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு திங்கள்கிழமை முடிவடைகிறது. இதையடுத்து தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு குறித்து இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தளங்களுடன் கூடிய ஊரடங்கால் திரையரங்குகள் திறப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.






