--- --:--:-- --

14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது..!

6

சென்னை அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கடந்த 16ஆம் தேதி ஆவடி அருகே வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

 

போலீஸ் விசாரணையில் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான நபர் ஒருவர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி திருப்பதிக்கு அழைத்துச் சென்ற கோயிலில் வைத்து திருமணம் செய்ததும் பின் அங்கேயே அறை எடுத்து தங்கி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது.

 

போலீஸ் தேடுவதை அறிந்து சிறுமியை வீட்டிற்கு அழைத்து வந்தபோது போலீசில் சிக்கியுள்ளார் அந்த நபர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon