--- --:--:-- --

12ம் வகுப்பு மாணவன் தற்கொலை.. ஓரினச் சேர்க்கையால் ஏற்பட்ட மன உளைச்சலே காரணம்..!

5

சென்னை பூந்தமல்லி அருகே 12ம் வகுப்பு மாணவர்களின் தற்கொலைக்கு காரணமான இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். 1ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டான்.

 

இதனையடுத்து பிரேத பரிசோதனையின் பொழுது மாணவர்களின் உடலில் அதிக அளவில் காயங்கள் இருந்த நிலையில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

 

மேலும் அவரது வீட்டில் இருந்த டைரியை சேகரித்த பொழுது அதில் சூர்யா என்ற நபரின் பெயர் எழுதி வைத்திருந்தது தெரியவே தலைமறைவாக இருந்த சூர்யாவை கைது செய்து விசாரித்த பொழுது தற்கொலை செய்து கொண்ட மாணவன் சூர்யா மற்றும் 17 வயது சிறுவன் என மூன்று நபர்களின் ஓரினச்சேர்க்கையிலிருந்து வந்ததாகவும் ஒரு கட்டத்தில் சூர்யாவிடம் ஓரினச்சேர்க்கையில் அந்த மாணவன் ஈடுபடுவதை தவிர்த்தபொழுது அவரது குடும்பத்தில் உள்ள பெண்களின் புகைப்படங்களை பரப்பி விடுவேன் என மிரட்டியதும் தெரிய வந்தது.

 

இதையடுத்து ஏற்பட்ட மன உளைச்சலில் அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தற்கொலைக்கு காரணமான சூர்யா மற்றும் 17 வயது சிறுவன் உட்பட இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர்.

 

Right Menu Icon