--- --:--:-- --

இந்தாண்டிற்குள் தினமும் 12 ஆயிரம் பேர் உயிரிழக்க நேரிடும்..!

5

இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா வைரசை விட வறுமையும், பசியும் தினமும் 12 ஆயிரம் பேரது உயிரை பறிக்கும் என்று சர்வதேச தன்னார்வ அமைப்பு எச்சரித்துள்ளது.

 

ஆக்ஸ்ஃபாம் என்ற சர்வதேச தன்னார்வ அமைப்பு வெளியிட்டிருக்கும் இந்த எச்சரிக்கையின் படி கொரோனாவால் எழுந்திருக்கும் அசாதாரணமான சூழலில் ஏராளமானோருக்கு வேலை இழப்பு, உணவு உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் காரணமாக கடும் பசியும், வறுமையும் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக நாள்தோறும் 12 ஆயிரம் பேர் உயிரிழக்கக் கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஏமன், காங்கோ, ஆப்கனிஸ்தான், வெனிசுலா, மேற்கு ஆபிரிக்காவின் ஷாகேல், எத்தியோப்பியா, தெற்கு சூடான், சிரியா, சூடான் மற்றும் ஹைதி ஆகிய நாடுகள் அதிக பஞ்சத்தால் வாடும் என்றும் ஆக்ஸ்ஃபாம் எச்சரித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon