--- --:--:-- --

நிலக்கரி சுரங்கத்தில் விபத்து.. 12 பேர் உயிரிழப்பு..!

3

பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். பலுசிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. அப்பொழுது 18 நபர்கள் சுரங்கத்தில் பணியாற்றினர். உடனடியாக மீட்பு பணி தொடங்கியது.

 

6 நபர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்தனர் என அறிவிக்கப்பட்டது. அவர்களது உடல்களும் மீட்கப்பட்டன. மீத்தேன் வாயுக் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

 

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon