கல்யாணத்திற்காக கொண்டு சென்ற பணம்..பறிமுதல் செய்த பறக்கும் படையினர்..!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் சோதனைகள் ஈடுபட்ட பறக்கும் படையினர் கிருஷ்ண பாலா என்பவர் காதில் கொண்டு சென்ற ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இதைப்போல திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட 86 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பண்டல்களை பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தென்னம்பூர் கிராமத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது ஜெயராமன் என்பவர் திருமணத்திற்காக பட்டுப் புடவை வாங்க கொண்டு சென்ற இரண்டு லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்டம் சின்னரெட்டிப்பட்டியில் உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற இரண்டு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.






