--- --:--:-- --

இந்தோனேஷியாவில் ராட்சத அலையில் சிக்கிய 11 பேர்..!

4

ந்தோனேஷியாவில் ராட்சத அலையில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்திலுள்ள மாவட்டத்தில் கடற்கரையில் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 20க்கும் அதிகமானோர் கடற்கரையில் திரண்டனர். அப்பொழுது கடல் திடீரென மேல் எழும்பியுள்ளது.

 

தரையில் நின்று கொண்டிருந்த 23 பேரை உள்ளே இழுத்து சென்றது .இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதில் 12 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 11 பேர் உயிரிழந்தனர்.

Right Menu Icon