ஹிஜாப் விவகாரத்தால் வகுப்புகளை மூடியது தவறு எனக்கூறிய மாணவி..!
கர்நாடகாவில் வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என உடுப்பியில் உள்ள பியூ கல்லூரி மாணவி ஒருவர் கூறியுள்ளார். அவர் கல்லூரி முதல்வரிடம் கொடுத்துள்ள கடிதத்தில் ஹிஜாப் விவகாரத்தில் வகுப்புகளை மூடியதால் மற்றவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் முதலில் துளு, உருது பேசுவது தொடர்பாக பிரச்சினை இருந்ததாகவும் அது முடிந்த நிலையில் ஹிஜாப் விவகாரம் கிளம்பி உள்ளதாகவும் குற்றம்சாட்டினார். 5 ஆண்டுகளாக அதே கல்லூரியில் படிப்பதில் இது போன்ற பிரச்சினையை முதன் முதலில் சந்திப்பதாகவும் கூறினார்.





