--- --:--:-- --

கர்நாடகாவில் கொரொனாவில் இருந்து மீண்ட 100 வயது மூதாட்டி…!

5

இந்தியாவில் கொரொனா பரவல் அதிகரித்து வருகிறது . எனவே கொரொனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மருத்துவர்களும் அரசாங்கமும் திணறி வருகிறது. இந்த நிலையில் கொரோனாவுக்கு வயது வித்தியாசமின்றி அனைவரும் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். கொரொனாவின் கோரப்பிடியில் அனைவரும் இரையாகின்றனர்.

 

இந்நிலையில் கொரொனாவிடம் சிக்கினால் மரணம் தான் என பீதியும் நிலவி வருகிறது. இந்த நிலையில் கொரொனாவை வென்று காட்டியுள்ளார் கர்நாடகாவை சேர்ந்த மூதாட்டி ஒருவர். கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் வசித்து வரும் 100 வயது மூதாட்டி கொரொனாவில் இருந்து முழுமையாக மீண்டு இருப்பது அச்சத்தில் இருப்பவர்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளித்துள்ளது.

 

பெல்லாரி மாவட்டத்தில் ஹுவினா ஹடஹல்லி நகரில் வசித்து வந்த 100 வயது மூதாட்டிக்கும், அவரது மகனுக்கும் கொரொனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

தற்போது அவற்றிலிருந்து முழுமையாக குணம் அடைந்து இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவர்களின் கனிவான கவனிப்பால் தான் தன்னால் கொரொனாவை வெல்ல முடிவதாக அந்த மூதாட்டியை மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon