நாளை தமிழகம் முழுவதும் முழு முடக்கம் அமல்..!
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஜூலையில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வற்ற முழு பொது முடக்கம் பின்பற்றப்படுவது நடைமுறையின்படி நாளை தமிழகத்தில் முழுமுடக்கம் அமலாகிறது.
கொரொனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் 31-ஆம் தேதி வரை தொடர்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வற்ற பொது முடக்கம் அமலாகி வருகிறது.
கடந்த மூன்று ஞாயிற்றுக்கிழமைகளை தொடர்ந்து நான்காவது நாளாக நாளையும் முழுமுடக்கம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு வடிவங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டாலும் தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது.
சென்னையில் கொரொனாவின் தாக்கம் ஓரளவு குறைந்து வரும் போதும் பிற மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையை தவிர கொரோனாவின் தாக்கம் அதிகம் காணப்படும் மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் நேற்று ஆலோசனை நடத்தினார்.
கொரொனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தமிழகத்தில் பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.







