சேதமடைந்த பாலம் கண்டுகொள்ளாத அதிகாரிகள் சீரமைக்கப்படுமா ?
மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாவினிப்பட்டி ஊராட்சி பகுதியான நா.கோவில்பட்டியில் பெரியாறு ஒரு போக பாசன வாய்க்கால் இருக்கிறது. அந்த வாய்க்காலை கடக்க 22(L) வது மடை அருகே இருக்கும் பாலத்தை (LS.10650 M) பயன்படுத்துகின்றனர்.
தினசரி குறிப்பிட்ட அந்த பாலத்தின் வழியாகத்தான் பள்ளி வாகனங்கள், கர்ப்பிணிப் பெண்களை அழைத்துச் செல்லும் அவசர ஊர்திகள், விவசாயிகள் தங்கள் பயிரிட்டு இருக்கும் பயிர்களை சந்தைக்கு எடுத்துச் செல்லும் சரக்கு வாகனங்கள், மதுரை முதல் காரைக்குடி நெடுஞ்சாலை பணிக்கு மூலப் பொருட்கள் எடுத்துச் செல்லும் சரக்கு வாகனங்கள் முதலிய ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.

இந்த நிலையில் பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் வலு இழந்து ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டும்,பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்தும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த நிலையை மாற்ற பழைய பாலத்தை முழுவதுமாக அப்புறப்படுத்திவிட்டு மீண்டும் அகலமாக புதிய பாலத்தை அமைத்துத் தரும்படி நா.கோவில்பட்டி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.







