பெற்றோர் வாக்களித்தால் மாணவர்களுக்கு கூடுதலாக 10 மதிப்பெண்கள்..!
உத்திர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பெற்றோர் வாக்களித்தால் மாணவர்களுக்கு கூடுதலாக 10 மதிப்பெண்கள் வழங்குவதாக லக்னோவில் உள்ள கல்லூரி ஒன்று அறிவித்துள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் இன்று நான்காவது கட்டமாக 59 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வலியுறுத்தியும் வருகிறது.
இந்நிலையில் வாக்குப்பதிவு விழுக்காடு அதிகரிக்க லக்னோவில் உள்ள பல்வேறு வித்தியாசமான நடைமுறையை பின்பற்றி உள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் பெற்றோர் நடப்பு தேர்தலில் வாக்களித்தால் தேர்வில் 10 மதிப்பெண் கூடுதலாக வழங்கப்படும் என அந்த கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.





